வாக்காளர் பட்டியல் திருத்த பணியை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.;
திருக்கோயிலூர் அருகே நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த பணி
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஊராட்சி ஒன்றியம், அடுக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகளுக்கான முகாம் நடைபெற்றது,
முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சாய்வர்தினி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.