இ - சேவை மையத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

Villupuram Collector Inspection at e-Service Center

Update: 2022-06-19 14:00 GMT

நியாய விலை கடை மற்றும் இ-சேவை மையத்தை விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

நியாய விலை கடை மற்றும்  இ-சேவை மையத்தை  விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், நியாயவிலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்கள் போதிய அளவு இருப்பு உள்ளதா என்பதையும், பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா எனவும், பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்தும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் சரியாக உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என நியாயவிலை கடை பணியாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அதேபகுதியில், அரசு இ சேவை மையத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றினை பெறுவதற்கு பதிவு செய்யவரும் பொழுது அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். சான்றிதழ் பெறுவதற்கான விவரம் அறியாத நபர்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான சரியான தகவல் வழங்கிட வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை காக்க வைக்காமல் முன்னுரிமை அளித்து அவர்களின் விண்ணப்பித்தை பதிவு செய்திட வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் இருப்பிடச் சான்று வேண்டி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News