தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி: இயக்குநர் நேரில் ஆய்வு

Training for Firefighters;

Update: 2022-06-30 07:30 GMT

தீயணைப்பு வீரர்களுக்ககான பயிற்சி நேரில் ஆய்வு செய்த இயக்குநர் ரவி.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரசூரில் தீயணைப்பு வீரர்களுக்கு நடைபெற்ற பயிற்சியை இயக்குனர் ரவி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுசெய்யப்பட்ட 143 தீயணைப்பு வீரர்களுக்கு 3 மாத கால அடிப்படை பயிற்சி திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள வி. ஆர். எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இதை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி நேரில் சென்று ஆய்வுசெய்தார். அப்போது பயிற்சி வகுப்பை பார்வையிட்ட அவர் பயிற்றுநர் மற்றும் பயிற்சியாளர்களிடம் பயிற்சி நடைபெறும் விவரத்தை கேட்டறிந்தார். அப்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர் சரவணன், திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News