திருக்கோவிலூர் பகுதியில் லாட்டரி, குட்கா விற்பனை 3 பேர் கைது
திருக்கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி குட்கா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரிகள் விற்பனை செய்வதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
அதனடிப்படையில் அப்பகுதியில் திருக்கோவிலூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அங்கு திருக்கோவிலூரில் பகுதியில் கடைகளில் லாட்டரி மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடையை லாட்டரி மற்றும் 5 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,
இதில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கண்ணன், பாலாஜி மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த ராஜ ரத்தினம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.