மணலூர்பேட்டை பகுதியில் நடக்கும் தொடர் குற்ற சம்பவங்கள்; போலீஸ் திணறல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி மணலூர் பேட்டை பகுதியில் நடக்கும் தொடர் குற்ற சம்பவங்களால் அச்சத்தில் மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் தண்டபாணி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணலூர் பேட்டை பகுதியில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது, இந்நிலையில் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் இன்று நடந்தது, அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களால் போலீசார் திணறி வருகின்றனர்.