மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர்;
மாட்டு வண்டியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் போலீஸாரைக்கண்டு தப்பி ஓட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.மெய்யூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே சி.மெய்யூர் பகுதிகளில் திருவெண்ணைநல்லூர் உதவி ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணிக்கு அப்பகுதிக்கு சென்றனர். அப்போது சி.மெய்யூர் அருகே ஆற்றில் இருந்து 4 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்டனர். அப்போது போலீசார் கண்டு, அவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.