உளுந்தூர்பேட்டைக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு லோக்கல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி கோரிக்கை.;

Update: 2021-10-19 02:11 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்க்கு விழுப்புரம் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் கோரிக்கை.

இது குறித்து இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் அ.குமார் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் விழுப்புரத்தில் இயங்கி வருகின்ற பல்வேறு வணிக நிறுவனங்களில் வேலை செய்கின்றவர்கள், கட்டிட வேலை செய்கின்றவர்கள் பலர், அரசு அலுவலர்கள், இரவு நேரங்களில் விழுப்புரத்திலிருந்து பிடாகம், பேரங்கியூர், இருவேல்பட்டு, அரசூர், மடப்பட்டு, மேட்டத்தூர், கெடிலம், வண்டிப்பாளையம் என பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்து இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விரைவு பேருந்துகளோ பயணிகளை ஏற்றுவதுமில்லை, நிற்பதுமில்லை. அதனால் உடல் உழைப்பு தொழிலாளர்களின் நலன்கருதி விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை லோக்கல் பேருந்து இயக்கிட இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளார் இருவேல்பட்டு அ.குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு  விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News