விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய சிறுமியின் உடல் மீட்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் எடுக்கப்பட்ட மணல் பள்ளங்கள் தான் இதற்கு காரணம் என குற்றச்சாட்டு.;
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய சிறுமி
விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கரும காரியம் செய்ய ஆற்றில் இறங்கிய சிறுமி பலியானார். 3 மணி நேரம் போராடி சடலத்தை திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளி கண்ணு என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார், இந்நிலையில் அவரது மகன் சின்னராசு மனைவி மகாலட்சுமி மகள் ஜெயலலிஜா ஆகியோர் அவருக்கு கருமகாரியம் செய்வதற்காக குடியிருப்பு அருகாமையிலிருந்த தென்பெண்ணை ஆற்றில் இறங்கியுள்ளனர், இதில் சிறுமி ஜெயலலிஜா ஆற்றில் திடீர் என வந்த அதிகப்படியான தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார், இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர், சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுனர், சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர், இச்சம்பவத்தினால் அக்கிராம மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், தென்பெண்ணை ஆற்றில் எப்போதெல்லாம் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது, இதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் எடுக்கப்பட்ட மணல் பள்ளங்கள் தான் என்று அப்பகுதி மக்களும்,சமூக ஆர்வலர்கள் ஆகியோர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.