திருவெண்ணெய் நல்லூர் அருகே அய்யனார் கோயிலில் பூஜை பொருட்கள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே அய்யனார் கோயில் பூட்டை உடைத்து திருடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரியசெவலை பகுதியில் குண்டு மணி அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம்போல் நேற்று மாலையில் பூஜை முடித்துவிட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவில் இந்த கோவிலுக்கு மர்ம கும்பல் வந்தது. அப்போது அந்த மர்ம கும்பல் கோவிலின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்து பின் கோவிலில் உள்ளே இருந்த பித்தளை பூஜை பொருட்கள் அனைத்தையும் திருடி சென்றனர்.
மேலும் கோவிலின் உள்ளே மற்றும் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடி சென்றனர். இன்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு கோவிலின் சுவரை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.