அரகண்டநல்லூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் அருகே கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட வரை போலீசார் கைது செய்தனர்;
அரகண்டநல்லூர் அருகே சாராயம் பெற்றவரை போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கள்ள சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையில் காவலர்கள் அந்தக் கிராமத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீரபாண்டி, பெருமாள் கோயில் தெருவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அதே தெருவை சேர்ந்த தாண்டவராயன் மகன் கலைஞர்( 24 ) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வீட்டின் அருகில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் 40 லிட்டர் சாராயம் வைத்து விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை தரையில் கொட்டி அங்கேயே அழித்தனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.