தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் நிவாரண உதவி
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் நிவாரணம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஆமூர் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
அந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை,வேட்டி, அரிசி,மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் எம்.பி இன்று வழங்கி ஆறுதல் கூறினார்.