திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு இடம் தேர்வு

திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு அமைச்சர் இடம் தேர்வு செய்தார்;

Update: 2021-06-06 08:53 GMT

 திருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு அமைச்சர் பொன்முடி இடம் தேர்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் பொன்முடி, அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான திருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் என்பது அதனை நிறைவேற்றும் வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News