பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
திருக்கோவிலூர் அருகே முகையூரில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்;
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் பகுதியில் சமூக பாதுகாப்புத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இரண்டு மாதத்திற்கான ரூ.4000/- உதவித்தொகையினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.