மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருவெண்ணைநல்லூர் அருகே மேல மங்கலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.;

Update: 2021-12-23 09:11 GMT

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே  மேல மங்கலத்தில் ஆதிதிராவிடர் தெருவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின்கீழ் ரூ.13.39 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை  அமைச்சர் பொன்முடி  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று (23.12.2021) திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர்.த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News