திருக்கோவிலூர் தொகுதி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் அமைச்சர் பொன்முடி

திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த அமைச்சர் பொன்முடி.;

Update: 2021-06-02 15:15 GMT

அரகண்டநல்லூர் சமுதாயக்கூடம் அருகில் அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை பார்வையிட்ட வருவாய்த்துறை, கல்வித்துறை அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டம்,  அரகண்டநல்லூர் பேரூராட்சியில் மாணவிகள் பாதுகாப்புடன் பள்ளிகூடம் சென்றுவரும் வகையில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைத்திட  இப்பகுதி மக்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 2011 ஆம் ஆண்டில் பொதுமக்கள் சார்பாக அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம் டெபாசிட் பணம் கட்டி காத்திருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அரகண்டநல்லூர் பொதுமக்களின் கோரிக்கையை அரசு புறக்கணித்து வந்தது. அரகண்டநல்லூர் கல்வி குழு பல கட்ட போராட்டங்களை அறிவித்து, அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் நிறைவேற்றாத நிலையில், அப்போது கல்விக்குழு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தேர்தல் பரப்புரையின் போது  அமைச்சர் பொன்முடி சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் அரகண்டநல்லூரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உடனடியாக அமைக்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். தற்போது திமுக  தலைமையில் புதிய ஆட்சி அமைத்துள்ள நிலையில்  அரகண்டநல்லூரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். 

அதன்பேரில் கடந்த 10 நாட்களாக வருவாய்த்துறை, கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர்  அரகண்டநல்லூர் சமுதாயக்கூடம் அருகில் அரசுக்கு சொந்தமான சர்வே எண். 128/10, 124/1ல் 3 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு  வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை ஒப்படைத்தனர்.

ஊரின் மையப்பகுதில் , குடியிருப்புகளோடு, போக்குவரத்து வசதி உள்ள  இடத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைவது இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்பகுதி கல்விக் குழு மற்றும் அரகண்டநல்லூர் பகுதி பொதுமக்கள் அமைச்சர் பொன்முடிக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.  

Tags:    

Similar News