வேளாண்மை விரிவாக்க கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல்
கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட முகையூர் ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு அமைச்சர் பொன்முடி இன்று அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஊராட்சி ஒன்றியம், அரகண்டநல்லூரில், (18,06-2022) இன்று சனிக்கிழமை வேளாளர் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம், ஒழுங்கிணந்த வேளாளர். விரிவாக்க மையம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கள் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.போகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையேற்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டுவதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
அதிலும் வேளாண்மைத்துறைக்கு சிறப்பு எடுத்து விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதுடன், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலை அறிகைக்காக வழங்கி, வழங்கியது பனமட்டுமின்றி ஒரு விவசாயிக்கு வேளாண்மை பணியினை துவங்கி அறுவடை செய்து விற்பனை செய்யும் வரை அனைத்து உதவிகளையும் அரசே முன்னின்று மேற்கொள்ளும் வகையில் திட்டங்களை தீட்டி வேளாண்மைத்துறையை முதன்மைத்துறையாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெற்றிடும் வகையில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரியாக்க மைய கட்டடம் கட்டும் பணி துவங்கி வைக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், வேளாளர்மைத்துறை செயற்பொரியார் பழனிவேல் வோண்மைத்துறை துணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கனகலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.