24 மணி நேரத்தில் கிடைத்த மகிழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், கொடுங்கால் ஊராட்சியில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு 24 மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்;
கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்த அமைச்சர். மக்கள் மகிழ்ச்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொடுங்கால் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியிடம் தொலைபேசி மூலம் தங்களது குடிநீர் பிரச்சனையை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளிடமும் உடனடியாக பேசி ஆழ்துளை கிணறு அமைத்து 24 மணி நேரத்தில் கொடுங்கால் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார். உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அப்பகுதி மக்கள் நன்றியினைத் தெரிவித்து வருகின்றனர்.