குட்கா கடத்தல் : சிக்கிய குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய போலீசார் குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்;

Update: 2021-06-05 10:44 GMT

4 லட்சம் மதிப்பிலான குட்காவை  பறிமுதல் செய்த போலீசார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர் காவல் நிலைய சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், சனிக்கிழமை தேவனூர் கூட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியா வந்த  மகேந்திரா பொலிரோ பிக்கப் வண்டியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் பொதினா தழை மூட்டை கட்டுகளுக்கு கீழே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 24 மூட்டையில் போதைப்பொருள்கள் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட 71,640 பாக்கெட் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வாகனத்துடன் 3 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக  தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோர் பிடிபட்ட குட்காவை பார்வையிட்டு போலீசாரை பாராட்டினர்.

Tags:    

Similar News