அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரகண்டநல்லூரில் அமைந்துள்ள மார்கெட் கமிட்டியின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,000 கரும்பு டன்னுக்கு ரூ.4000 விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரிலும், வீரபாண்டி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட பொருளாளர் எம்.பழனி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலகுழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வட்ட குழு உறுப்பினர் ஏ.வி கண்ணன், அரகண்டநல்லூர் நகர செயலாளர் பி.ராமகிருஷ்ணன், மற்றும் வட்ட குழு உறுப்பினர் என் எ.ஸ்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.