விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய விதை நெல் உற்பத்தி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய விதை நெல் ரக உற்பத்தியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட, கண்டாச்சிபுரம் தாலுக்காவில் முதல் முறையாக இருவேல்பட்டு அரசு விதைப்பண்ணையில் இயற்கை முறையிலான பாரம்பரிய நெல் விதைகளான தூயமணி, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய ரகங்கள் நெல் விதை உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.மோகன் தொடங்கி வைத்தார்,
பண்ணை மேலாளருக்கு இயற்கை முறையிலான பாரம்பரிய நெல்விதைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன். வேளாண்மைத்துறை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) வேல்விழி, மாவட்ட ஆட்சரியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)பெரியசாமி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.