மதிய உணவின் தரம் குறித்து விழுப்புரம் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர்மோகன் திடீரென ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ள காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மதிய உணவின் தரம் குறித்து அறிந்திடும் வகையில் மாவட்ட கலெக்டர் த.மோகன்,இன்று (16.02.2022) அந்த சத்துணவை உட்கொண்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.