விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பணிகளை ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2022-07-05 14:47 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பொதுநிதியின்கீழ் பல்வேறு சாலைப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று (05.07.2022) திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் திடீர் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏனாதிமங்கலம் முதல் மாரங்கியூர் இடையிலான கோரையாற்றின் குறுக்கே தரைப்பாலம், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், பொது நிதி 2021 - 2022 கீழ் ரூ.24.05 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சாலை பொதுமக்களின் நீண்ட நாள் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருபக்கவாட்டுகளிலும் கரைகளை பலப்படுத்தி கண்காணித்திட வேண்டும். தற்பொழுது மழைக்காலமாக இருப்பதால் சாலையில் எந்த பாதிப்பும் வராத வண்ணம் சாலையின் இருபக்களின் உறுதித்தன்மையை அவ்வப்பொழுது ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News