விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் பதினெட்டாவது கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், பெரியசெவலை குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற 18-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (22.01.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.