கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

Update: 2022-02-12 13:45 GMT

கடன் தள்ளுபடி சான்றிதழ் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு  கடன் தள்ளுபடி சான்றிதழ் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சித்தலிங்கமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 பவுன் வரையிலான பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழினை  உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கலந்து கொண்டு  இன்று (12.02.2022) பயனாளிகளுக்கு வழங்கினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள்.யசோதா தேவி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News