மாட்டு வண்டியில் மணல் கடத்தல் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மலட்டாற்றில் மாட்டு வண்டியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர், போலீசாரை கண்டு ஓட்டமெடுத்தனர்.;

Update: 2022-07-12 17:30 GMT

மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் தொட்டிமேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலட்டாறு வாய்க்காலில் அனுமதியின்றி மர்ம நபர்கள் 3 மாட்டு வண்டிகளில்  மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்டவுடன் மாட்டு வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News