தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-08 07:13 GMT

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தனிபடை காவலர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்று கொண்டிருந்த ஆசிரியர் நகர், அரகண்டநல்லூர் பகுதியை  சேர்ந்த கந்தசாமி மகன் கலையழகன் வயது( 60) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்தும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Tags:    

Similar News