திருக்கோவிலூர் அருகே பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டில் பக்தர்கள் இல்லாமல் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது.;

Update: 2021-08-02 17:21 GMT

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பொது தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுருந்தது. 

இந்நிலையில், ஆடி கிருத்திகை ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்றது. ஆனால், ஒரு சில பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து சென்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வராமல் வெறிச்சோடி காட்சியளித்தது.

Tags:    

Similar News