அரகண்டநல்லூr படுகொலை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நடந்த படுகொலைகளை கண்டித்து னைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2021-12-07 10:45 GMT
அரகண்டநல்லூr படுகொலை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

அரகண்டநல்லூர் கடைவீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

  • whatsapp icon

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் கடைவீதியில் கொலைசெய்யப்பட்ட  வீரபாண்டி சித்ரா, விவசாயி உலகநாதன் ஆகியோர் படுகொலைகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

கண்டன ஆர்பாட்டத்தில், இந்த வலக்கை  சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு குற்றவாளிகளை கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும்,  படுகொலை செய்யப்பட்ட சித்ரா குடும்பத்திற்கு நிவாரணமாக 20 லட்சம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் முன்பு கடைவீதியில் நடைபெற்றது

ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்திந்திய மாதர் சங்கம், விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News