திருவெண்ணைநல்லூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப்பை பயன்பாடு உறுதிமொழி ஏற்பு

Plastic Ban News - விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய குழு கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழித்து மஞ்சப்பை பயன்படுத்த உறுதி ஏற்றனர்.;

Update: 2022-07-20 02:52 GMT
திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஓம் சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

Plastic Ban News - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக்அலிபேக், தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைதலைவர் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். உதவியாளர் அன்பு தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு, கட்டிட பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், கவுன்சிலர்கள் தெரிவித்த தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவலகபணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிளாஸ்டிக் ஒழிப்பை அனைவரும் செயல்படுத்த வேண்டும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News