கட்டாய திருமண பேச்சால் இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

Girl Suicide - விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே இளம் பெண்ணுக்கு கட்டாய திருமண பேச்சு எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-28 01:56 GMT

Girl Suicide - விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லேந்திரன். இவரது மகள் வினோதினி. பிளஸ்2 படித்து முடித்துள்ள இவர், உயர்கல்வி படிக்க விரும்பி உள்ளார். ஆனால், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.இதனால் விரக்தியில் இருந்த வினோதினி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News