திருவெண்ணெய்நல்லூர் அருகே சர்க்கரை ஆலை ஊழியரை காணவில்லை
Missing Cases -விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சர்க்கரை ஆலை ஊழியரை காணவில்லை போலீசார் தேடி வருகின்றனர்.;
Missing Cases -விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வளம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் (வயது 26) இவர் திருக்கோவிலூரில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் கணக்கு பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 17ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் திவாகரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் எங்கு தேடியும் திவாகர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திவாகரின் தந்தை ஏழுமலை திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்த. புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகர் என்ன ஆனார்,எங்கு சென்றார், என்பது குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2