தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரின் தேடுதல் பணி இரண்டாவது நாளாக நீடித்தது.;

Update: 2022-09-15 12:08 GMT

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் புதன்கிழமை மாலை விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவரும் சக மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது விழுப்புரம் அருகே உள்ள தோகைபாடி கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் சுந்தரராஜன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வேல்முருகன், பாஸ்கரன் போட் மூலமாகவும் வீரர்கள் மாணவனின் உடலை 2-வது நாளாக தொடர்ச்சியாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் மற்றும் அதிகாரிகள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News