இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி
விழுப்புரம் அருகே உள்ள அரசூர் பகுதியில் மீன் விற்கும் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்;
இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூரில் அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் ஒரு பெண்ணை கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றபோது பொதுமக்கள் அவரைப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ரோடு தெருவைச் சேர்ந்தவர் ராமாயி. இவர் அரசூரில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்கின்றார். இவரும் இவரது மகளும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் கடையில் இருந்த ராமாயி மகளை, பண்ருட்டி திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அய்யனாரை பிடித்து தர்ம அடி கொடுத்து அரசூர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். தகவலறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அப்புவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அய்யனார் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.