விழுப்புரம் மாவட்டத்தில் 100% தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நூறு சதவீத தடுப்பூசி முகாம் கலெக்டர் ஆய்வு.;

Update: 2021-10-10 16:45 GMT

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரங்கியூர் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 100 சதவீதம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடைபெற்றுவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகன்,இன்று (10.10.2021) நேரில் சென்று பார்வையிட்டார். அருகில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News