விழுப்புரம் விவகாரம் - இருவர் கைது
பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவம்.;
விழுப்புரம் விவகாரத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் விசாரணை நடத்தி 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்து இருவரை கைது செய்தனர்,
விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்,
காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்,
மற்றொரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் மக்கள் மீது பெயர் குறிப்பிட்ட 4 பேர் மற்றும் பெயர் குறிப்பிடபடாத 50 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.