திண்டிவனம் எம்.எல்.ஏ. அலுவலகம்: எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

திண்டிவனம் எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டப்பட்ட நாள் முதல், இதுவரை எந்த எம்.எல்.ஏ.வும் அதனை பயன்படுத்தாமல் புதர்மண்டி கிடக்கிறது;

Update: 2021-06-23 16:43 GMT

திண்டிவனம் எம்.எல்.ஏ. அலுவலகம்  இதுவரை எந்த எம்.எல்.ஏ.வும்  பயன்படுத்தாமல் புதர்மண்டி கிடக்கிறது

கடந்த 2001ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறவும், குறைகளைக் கேட்டறியவும் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது. திண்டிவனத்திலும் ராஜாங்குளத்தையொட்டி உள்ள திரவுபதி அம்மன் கோவில் எதிரே எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது. அப்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ., சேதுநாதன் அலுவலகத்திற்கு செல்லவில்லை.

2001 மற்றும் 2006 வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகமும் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அரிதாசும் அலுவலகத்தை உபயோகப்படுத்தவில்லை

கடந்த 2016ல் தி.மு.க., சார்பில் வென்ற சீத்தாபதி சொக்கலிங்கமும், அலுவலகத்தை பயன்படுத்தவில்லை.

எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்ட நாள் முதல் யாரும் இதுவரை பயன்படுத்தவே இல்லை.

தற்போது, திண்டிவனத்தில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அர்ஜூனனும் இதுவரை எம்.எல்.ஏ. அலுவலகம் பக்கமே வரவில்லை, விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம் உள்ளிட்ட தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் அலுவலகங்களைத் திறந்து அங்கு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, மனுக்களைப் பெற்று வருகின்றனர். ஆனால், திண்டினம் தொகுதி மக்கள் எங்கு, யாரிடம் மனுக்களைக் கொடுப்பது என தெரியாமல் அலைகின்றனர்.

எம்.எல்.ஏ., மக்களை சந்தித்து அவர்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை கட்டப்பட்ட நாள் முதல், இதுவரை எந்த எம்.எல்.ஏ.,வும் பயன்படுத்தாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறையாவது தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து புதுப்பித்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவாரா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News