வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியது
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் , உபரி நீர் திறந்து விடப்பட்டது
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வீடுர் அணை நீர்வரத்து பகுதிகளில் , அணைக்கு வரும் சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அணை வேகமாக நிரம்பி வந்தது.
இந்நிலையில் இன்று வீடுர் அணை முழு கொள்ளளவான 32 அடியை எட்டிய நிலையில் இன்று அணையின் பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 40,000 கன அடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.