சுகாதார சீர்கேடு: கூட்டேரிப்பட்டு திருமண மண்டபத்திற்கு அபராதம் விதிப்பு
கூட்டேரிப்பட்டில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேட்டில் ஈடுபட்ட திருமண மண்டப உரிமையாளருக்கு 20,000 அபராதம் விதித்தனர்
சுகாதார சீர்கேடு திருமண மண்டபத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கூட்டேரிப்பட்டில் சுகாதார சீர்கேடாக கிடந்தது தொடா்பாக திருமண மண்டப உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே ஒரு திருமண மண்டபம் இயங்கி வருகிறது.
இந்த மண்டபத்துக்கு அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடாக இருந்துள்ளது.இதை அந்த வழியாக சென்ற, மாவட்ட ஆட்சியர் மோகன் பார்த்தார். உடன் அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து, அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, சம்பந்தப்பட்ட மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், குப்பையை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.