வீடு சேதமடைந்தவருக்கு ஒன்றிய கவுன்சிலர் நிவாரண உதவி
மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மேல் சேவூர் ஊராட்சியில் வீடு சேதமடைந்தவருக்கு ஒன்றிய கவுன்சிலர் நிவாரண உதவிகள் வழங்கினார்.;
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சேவூர் ஊராட்சியை சேர்ந்த ஈச்சூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் காசியம்மாள் என்பவரது வீடு சேதமடைந்தது, உடனடியாக தகவலறிந்த ஒன்றிய கவுன்சிலர் கம்சலா மாரிமுத்து நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.