மயிலம் அருகே நெடுஞ்சாலையின் தடுப்புக் கட்டையில் லாரி மோதல்: ஓட்டுநர் உயிரிழப்பு
மயிலம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் லாரி மோதி விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த லாரியை நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த குமரேசன்(26), என்பவர் ஓட்டி வந்தார். அப்போது லாரி மயிலம் அருகே விளங்கம்பாடி அய்யனாரப்பன் கோயில் எதிரே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.