பட்டா கேட்டு பழங்குடி இருளர் இன மக்கள் கோரிக்கை மனு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.;
மயிலம் ஒன்றியம், விழுக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின இருளர் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டிவனம் கோட்டாட்சியரிடம் தமிழ்நாடு பழங்குடியினர்கள் மக்கள் சங்கத்தின் மயிலம் ஒன்றிய செயலாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தமிழரசன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மயிலம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் உடன் பழங்குடியின மக்கள் மாரியம்மாள், வெங்கடேசன், ராமு, ஞானப்பண்டிதன், வள்ளி, கன்னியம்மாள், மாயாவதி, சீதா, குமாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனா்.