மயிலம் அருகே கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது
மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்த முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே முப்புளி அங்காளம்மன் கோவில் அருகே மயிலம் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்த முயன்றனர். இதில் போலீசாரை பார்த்ததும், அவர்கள் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயன்றனர்.
இதைப்பார்த்த போலீசார், அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரெட்டணை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த லோகு மகன் ஸ்ரீகாந்த் (வயது 23), வெங்கடேசன் மகன் சஞ்சய் என்கிற ராமலிங்கம் (21) மற்றும் வானூர் அடுத்த எடையஞ்சாவடி நடுத்தெருவை சேர்ந்த ரவி மகன் சந்துரு (25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து1 ½கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.