வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ சிவக்குமார் புகார் மனு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், பாமக எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோரை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் எம்எல்ஏ சிவக்குமார் புகார் மனு ஒன்றை அளித்தார்.