இருளர் இன சாதி சான்றிதழ் கேட்டு சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
இருளர் இன சாதி சான்றிதழ் கேட்டு சின்னநெற்குணம் கிராம மக்கள் திண்டிவனம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்;
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட சின்னநெற்குணம் கிராமத்தில் வசிக்கும் 14 பழங்குடி இருளர் இன குடும்பத்தை சேர்ந்த 24 நபர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வழக்கறிஞர் தமிழரசன் தலைமையில் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.