மயிலம் அருகே தெருக்களில் குட்டை பாேல் தேங்கிய மழைநீரால் பாெதுமக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.;
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் உள்ள தெருக்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றன.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் உள்ள தெருக்களில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த சாதாரண கனமழைக்கே மழைநீர் வெளியேற வழியின்றி தெருக்களில் குட்டை போல் தேங்கி நிற்கின்றன.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த தெருவில் குட்டை பாேல் தேங்கியுள்ள நீரில் நீந்தி தான் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், அப்போது பெய்யும் அதிகப்படியான கனமழையால் ஏற்படும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்வதற்குள் ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மழை தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.