விழுப்புரம் அருகே கோயில் உண்டியில் உடைப்பு மக்கள் அதிர்ச்சி
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கோயில் உண்டியல் உடைக்கப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்;
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட விளங்கம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். அவர் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. கோவிலின் பின்பக்க கேட் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.