செல்போன் பறித்தவர்களை விரட்டிப் பிடித்த மயிலம் போலீசார்

மயிலம் பகுதியில் செல்போன் பறித்து சென்ற இருவரை துரத்தி சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன;

Update: 2021-06-10 09:45 GMT

மயிலம் பகுதியில் செல்போன் பறித்து சென்ற இருவரை துரத்தி சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மீன் வியாபாரியிடம் செல்போனை பறித்து சென்ற இரு இளைஞர்களை மயிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆனந்த், நாகராஜ் ஆகிய இரு போலீசார் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

அவர்கள் பயன்படுத்திய பைக்கின் முன்புறம் மருத்துவம் என்று ஒட்டி இருந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் காவல்நிலை அழைத்து வரப்பட்டனர். கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 15 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு துரத்தி பிடித்த இரு போலீசாரையும் டி.எஸ்.பி., கணேசன் பாராட்டினார். செல்போன் பறிகொடுத்த கணவன், மனைவி இருவரும் மயிலம் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News