மயிலம் சுப்பிரமணியசாமி கோவில் பாலசித்தர் சமாதியில் குரு பூஜை வழிபாடு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணியசாமி கோவில் பாலசித்தர் சமாதியில் குரு பூஜை வழிபாடு நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டம் மயிலம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலசித்தர் ஜீவசமாதியான இடத்தில் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா நடப்பது வழக்கம். அதன்படி சனிக்கிழமை காலை 7:00 மணிக்கு பாலசித்தர் சுவாமிக்கு மகா குரு பூஜை நடந்தது. தொடர்ந்து நடந்த சமய சொற்பொழிவு நிகழ்ச்சியில் மயிலம் 20ம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பால சித்தர் இதழை வெளியிட்டு, ஆசியுரை வழங்கினார். பள்ளி செயலாளர் விஸ்வநாதன், கல்லூரி செயலாளர் ராஜீவ்குமார், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் சிவக்குமார் வரவேற்றார்.
பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஸ்ரீவில்லிபுத்துார் சுந்தரேஸ்வரர் கல்வியியல் கல்லுாரி நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன்,கரூர் தமிழ் அமுது அறக்கட்டளை அருணா பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்,கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.