மயிலம் அருகே இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று பட்டா வழங்கிய ஆட்சியர்
மயிலம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுசிவிரி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு ஆட்சியர் மோகன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்;
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுச்சிவிரி ஊராட்சியில் நீண்ட நாட்களாக வசிக்க இடமின்றி இருந்த இருளர் இனத்தை சார்ந்த 10 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நேரில் சென்று வழங்கினார்.