கூட்டேரிபட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி கூட்டேரிபட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் உள்ள கூட்டேரிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம், கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பிறந்தநாளை ஒட்டி மயிலம் சட்டமன்ற உறுப்பினரும்,பாமக மாநில துணை பொதுச்செயலாளருமான சிவகுமார் மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, இனிப்புகள் வழங்கினார்.